இன்றைய முன்னைய பதிவில் இதையும் சேர்த்தால் பதிவு இன்னும் நீண்டு விடும் என்பதனாலே இதைத் தனியாகத் தருகிறேன்.. :)
ஒரு மாபெரும் கிரிக்கெட் சாதனை..
உலக சாதனை ஸ்கோருடன் யூசுப் பதான்
இந்தியாவின் உள்ளூர்ப் போட்டியான திலீப் கிண்ணப் போட்டியின் இறுதியில் இன்று யூசுப் பதான் நிகழ்த்திய தாண்டவம்..
190 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 210 ஓட்டங்கள்.. இதற்குள் 10 சிக்சர்கள் வேறு..
தென் பிராந்திய அணி வைத்த பிரம்மாண்டமான இலக்கான 536 ஓட்டங்களை மேற்குப் பிராந்தியம் மிக இலகுவாகக் கடக்க பதானின் இந்த அதிரடி உதவியுள்ளது.
கடைசியாகவும் சிக்சரோடே வெற்றியைப் பெற்றுக் கொண்டார்.. அசுர பலத்துடன் அவரது அடிகளை ட்வென்டி 20௦ போட்டிகளில் அறிந்துள்ளோம்.. ஆனால் இது அசத்தல் அடி..
அபாரம் & ஆச்சரியம்..
முதல் இன்னிங்க்சிலும் தடுமாறிய தம் அணியை சதம் பெற்றுக் காப்பாற்றியவர் யூசுப் பதான்..
உலகிலேயே இதுதான் நான்காவது இன்னிங்க்சில் பெறப்பட்ட மிகப்பெரிய வெற்றி இலக்கு.மொத்த ஓட்ட எண்ணிக்கையிலும் இது ஐந்தாவது கூடிய எண்ணிக்கை.
மறுமுனையில் தென் பிராந்திய அணித் தலைவர் தினேஷ் கார்த்திக் பாவம்..
இரண்டு இன்னின்க்சிலும் தம் அணியைக் காப்பாற்றியவர் அவரே..
முதலாம் இன்னிங்க்சில் 183 & இரண்டாம் இன்னிங்க்சில் 150 ..
அவரது அணி வெற்றி பெறுவது யூசுப் பதாணினால் மட்டும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது..
மொத்தத்தில் இது பதான்&கார்த்திக் போட்டி..
இந்த கார்த்திக்கை விட்டு சகாவை இரண்டாவது விக்கெட் காப்பாளராக இந்திய தேர்வாளர்கள் முதலாம் டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்தார்களே...
இப்போ நடப்பது என்ன?
லக்ஸ்மன்,ரோஹித் ஷர்மா இரண்டு பேருமே காயம் அடைய சகா துடுப்பாட்ட வீரராக விளையாடுகிறார்.
அவரை விட சிறப்பான துடுப்பாட்ட வீரர் தினேஷ் கார்த்திக் இரண்டு சாதனைகளை ஒரே போட்டியில் பெற்று விட்டு
அணியும் வெற்றி பெறாமல் பரிதாபமாக நிற்கிறார்..
கார்த்திக் டெஸ்ட் போட்டியிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பதும் குறிப்பிடக் கூடிய ஒரு விடயம்.
மூன்று தமிழக வீரர்கள் ஒரே நேரத்தில் விளையாடக்கூடாது என எண்ணியிருப்பார்களோ?
விதி வலியது என்பது இது தானோ???